மருத்துவம்

இந்தியாவில் 42 லட்சம் பேர் புற்றுநோய்க்கு பலி!

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் புற்றுநோய் பாதித்து 42 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதில் ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகியவற்றில் மட்டும் 20.9% பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 7.13 லட்சம் பேரும், மகாராஷ்டிராவில் 3 லட்சத்து 95 ஆயிரம் பேரும், பீகாரில் 3 லட்சத்து 73 ஆயிரம் பேரும் கடந்த 4 ஆண்டுகளில் உயிரிழந்துள்ளனர். மாறிவரும் வாழ்க்கைச் சூழலே புற்றுநோய் அதிகரிப்பதற்கான காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கண் பாதுகாப்பு, கண் பார்வைக் குறைவு, நோய்நாடி நோய்முதல் நாடி!, புற்றுநோய், மருத்துவம்

கண்ணில் பூச்சி பறக்குது!

நோய்நாடி நோய்முதல் நாடி - 38 ரஞ்சனி நாராயணன் முதலில் ஒரு புதிய செய்தியுடன் இந்த வாரக் கட்டுரையை ஆரம்பிப்போம். புற்றுநோயைக் கண்டுபிடிப்பதில் ஒரு புதிய சாதனை. வளரும் நாடுகளில் புற்றுநோய் விகிதம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஏறத்தாழ புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கை 70% -ஐத் தொடுகிறது. ஆரம்ப நிலையில் இந்த நோயைக் கண்டுபிடிப்பது நோயாளியின் உயிரைக் காப்பாற்றும் என்றாலும், இந்நோய் வந்திருப்பதை கண்டறியும் முறைகளான முலை ஊடுகதிர்ப்பட சோதனை (mammogram), பெருங்குடல் அகநோக்கி (colonoscopy)… Continue reading கண்ணில் பூச்சி பறக்குது!

உறுப்பு தானம், கண் பாதுகாப்பு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவம்

கண்தானம் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!

நோய்நாடி நோய்முதல்நாடி - 35 ரஞ்சனி நாராயணன் இந்த வாரம் ஒரு ஆன்மிக கதையுடன் நம் கண் பற்றிய கட்டுரையைத் தொடர்வோம். விசிஷ்டாத்வைதம் என்கிற சித்தாந்தத்தை நிறுவிய ஸ்ரீ இராமானுஜரின் அணுக்கத் தொண்டர் ஸ்ரீ கூரத்தாழ்வான். இவர் காஞ்சீபுரம் அருகில் உள்ள கூரம் என்ற ஊரின் சிற்றசர். ஸ்ரீ இராமானுஜருக்கு தொண்டு செய்துகொண்டு வாழ வேண்டும் என்பதற்காக தனது செல்வம் முழுவதையும் தானம் செய்துவிட்டு ஸ்ரீ இராமானுஜரை சேர்ந்து ஸ்ரீரங்கத்தில் அவருக்குத் தொண்டு செய்து வருகிறார். அப்போது சோழ தேசத்து… Continue reading கண்தானம் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!

நோய்நாடி நோய்முதல் நாடி!, மன நலம், மருத்துவத் தொடர், மருத்துவம்

நம்மில் எத்தனை பேர் மனநல முதலீடு செய்கிறோம்?

நோய்நாடி நோய்முதல் நாடி - 22 ரஞ்சனி நாராயணன் சென்ற வாரம் காப்பீடு முதலீடு பற்றிப் பார்த்தோம். நேர முதலீடு பற்றியும் பார்த்தோம். இந்த வாரம் நாம் மனநல முதலீடு பற்றிப் பேசலாம். மன நலம்! நமக்கு வரும் நோய்கள் பலவும் மனதைச் சார்ந்தது என்கிறார்கள் மருத்துவர்கள். புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளான பலர் தங்கள் மனோபலத்தால் அதை ஜெயித்திருக்கிறார்கள் என்று பத்திரிகைகளில் படிக்கிறோம். அக்கம்பக்கத்திலும் கேள்விப்படுகிறோம். மனம் என்பது மிக வலிமையான ஆயுதம். நம்மில் எத்தனை பேர்… Continue reading நம்மில் எத்தனை பேர் மனநல முதலீடு செய்கிறோம்?