சினிமா

ஜகத்ஜால புஜபல தெனாலிராமன் மே ரிலீஸ்!

ஜகத்ஜால புஜபல தெனாலிராமன்  விடுமுறையை ஒட்டி மே மாதம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தில் வடிவேலு தெனாலிராமன், மன்னர் என இருவேடங்களில் நடிக்கிறார். மிகுந்த பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் டீ. இமான். படத்தில் மீனாட்சி தீட்சித் என்ற புதுமுகம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார் ஆரூர்தாஸ். படத்தை இயக்கியிருக்கிறார் யுவராஜ் தயாளன். தயாரிப்பு AGS எண்டர்டெயின்மெண்ட்ஸ்.