குழந்தை வளர்ப்பு, பெண்

இந்தப் பிள்ளைகளாவது நாளை ஒரு நல்லரசை தருவார்கள் என்று காத்திருப்போம்

அமுதா சுரேஷ் ஒரு காளையை வளர்ப்பவன் ஜல்லிகட்டிற்காக அதைப் பயன்படுத்த அனுமதி கிடையாது, ஒரு நாயை வளர்ப்பவன், அதை துன்புறுத்துவதற்கு அனுமதி கிடையாது, அதெல்லாம் மிருக வதை, சட்டங்கள் பாயும்,வரவேற்கிறேன்! ஆனால், ஒரு பெண்ணை மணந்ததால் அவள் என் மனைவி என்று சாலையில், வீட்டில் துன்புறுத்துவதும், குழந்தையைப் பெற்று விட்டதால், அந்த உரிமையில் தன் கண்மூடித்தனமான அபிமானத்தையோ, சில ஆயிரம் பணத்துக்காகவும், அந்தக் குழந்தைகள் கதற கதற பச்சை குத்தவும், அலகு குத்தவும் செய்யும் போது, ஏன்… Continue reading இந்தப் பிள்ளைகளாவது நாளை ஒரு நல்லரசை தருவார்கள் என்று காத்திருப்போம்

குழந்தை வளர்ப்பு

தொலைந்துபோன குழந்தைகள் உலகம்!

Kutti Revathi காலை வேளைகளில் குழந்தைகள் பள்ளிக்குப் போகும் போது அவர்களைச் சூழும் பரபரப்பைப் பார்த்தால் என்னையும் ஒருவகையான பதற்றம் தொற்றிக்கொள்கிறது. இனம்புரியாத வேதனை ஏறிக்கொள்கிறது. என் காலத்தில் பள்ளிக்குச் செல்வது இவ்வளவு அவசரமான, எரிச்சலான விடயமாக இல்லை. நீண்ட தூரம் பள்ளிக்கு நடந்துசெல்லவேண்டும். தம்பியையும் தங்கையையும் உடன் அழைத்துச் செல்லவேண்டும். காலை மணி ஒலிக்கும் முன்பே பள்ளியைச் சேர்ந்து விளையாடத் தொடங்கியிருப்போம். பள்ளியின் பொழுதுகள் நீண்ட, மெல்ல நகரும், அவசரமற்ற பொழுதுகளாகவே இருந்தன. மாலையும் பள்ளி… Continue reading தொலைந்துபோன குழந்தைகள் உலகம்!

குழந்தை வளர்ப்பு

போர்ன் இணையதளங்கள் – ஓர் எச்சரிக்கை!

எழுத்தாளர் ஷோபா சக்தி இந்தியாவில் 'போர்ன்' இணையத்தளங்கள் தடை செய்யப்படலாமா கூடாதா என்ற விவாதங்களைக் கவனித்தபோது ஒன்று சொல்லத் தோன்றுகிறது. போர்ன் இணையத்தளங்களை தடைசெய்யக்கூடாது எனச் சொல்பவர்கள் தனிமனித சுதந்திரம், மேலைநாடுகளில் தடையில்லை, சிறுவர்கள் இவ்விணையங்களைப் பார்க்காமல் ஒழுங்குபடுத்தினால் போதுமானது என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்த சொல்விற்பனர்கள் அதிமுக்கியமான விடயங்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். இன்று உலகில் நடத்தப்படும் மனிதக் கடத்தல்களில் எண்பது விழுக்காடு கடத்தல்கள் பாலியல் வணிகத்திற்காகவே நடத்தப்படுகின்றன. ஜப்பானில் தொடங்கி இங்கிலாந்து அமெரிக்காவரை இந்தக் கடத்தல் தொழில்… Continue reading போர்ன் இணையதளங்கள் – ஓர் எச்சரிக்கை!

குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

செல்வ களஞ்சியமே 100வது குழந்தை!

செல்வ களஞ்சியமே – 100 ரஞ்சனி நாராயணன் குழந்தையின் கோபத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? சின்னக் குழந்தைதானே, அதன் கோபம் நம்மை என்ன செய்துவிடும் என்று சிலருக்குத் தோன்றலாம். ஒரு உதாரணம் பார்க்கலாம்: என் தோழிக்கு ஒரு பிள்ளை. ஒரு பெண். சிலநாட்களாகவே அவளது பிள்ளை அவனுடைய அறையிலிருந்து அதிகம் வெளியே வருவதில்லை. அப்பா அம்மாவுடன் அதிகம் பேசுவதில்லை. எல்லோருடனும் சேர்ந்து சாப்பிடுவதில்லை. என்ன ஆகியிருக்கும் என்று சிறிது கவலையுடன் தோழி தனது கணவரைக் கேட்டாள்.… Continue reading செல்வ களஞ்சியமே 100வது குழந்தை!

குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

குழந்தைகளுக்கு ரோல் மாடல் யார் தெரியுமா?!

செல்வ களஞ்சியமே – 99 ரஞ்சனி நாராயணன் ஒரு குழந்தையை ‘கெட்ட குழந்தை என்று முத்திரை குத்துவது மிகமிகத் தவறு. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே என்பதை பெற்றோர் நினைவில் கொள்ள வேண்டும். தான் ஒரு கெட்ட குழந்தை என்ற எண்ணம் குழந்தையின் மனதில் ஊறிவிட்டால் அப்படியே நடந்து கொள்ளும். வளர்ந்த பின்னும் அந்த எண்ணம் மாறாது. அதனால் சிறு வயதிலேயே அந்தக் குழந்தையிடம் பேச வேண்டும். என்ன சொல்லலாம்? ‘இங்கே பாரு, நீ… Continue reading குழந்தைகளுக்கு ரோல் மாடல் யார் தெரியுமா?!