குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

சகோதர சண்டை ஏன் வருகிறது? குழந்தை வளர்ப்புத் தொடர்

செல்வ களஞ்சியமே - 72 ரஞ்சனி நாராயணன் (வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற செல்வக் களஞ்சியம் தொடர் வெளியாவதில் சற்றே எதிர்பாராதவிதமாக இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அதற்காக வாசகர்களிடம் மன்னிப்பை கோருகிறோம். இனி புதன்கிழமை தோறும் செல்வக் களஞ்சியம் வெளியாகும். - ஆசிரியர் குழு) தினமும் சண்டைதான். எல்லாவற்றிலும் போட்டிதான். ‘அவள்/அவன் மட்டும் ஒசத்தியா? நான் தான் எப்பவும் விட்டுக் கொடுக்கணுமா? அவளை/அவனை ஒண்ணுமே சொல்ல மாட்டீங்க, என்ன மட்டும் எப்பவும் திட்டுவீங்க’ - இதெல்லாம் எங்கேயோ கேட்ட வசனங்களாக… Continue reading சகோதர சண்டை ஏன் வருகிறது? குழந்தை வளர்ப்புத் தொடர்

குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட பெற்றோர் தேவை?

செல்வ களஞ்சியமே - 71 ரஞ்சனி நாராயணன் சென்ற பத்தியில்  பார்த்த டைகர் மாம் - என்னும் ரொம்பவும் கண்டிப்பான அம்மாவின் குணாதிசயங்கள் பற்றித் தொடர்ந்து பார்ப்போம்: கோபமாக என்ன பேசுகிறோம் என்பதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். உண்மையில் குரலை உயர்த்திப் பேசுவதனால் ஒன்றும் நடக்காது. நிதானமான குரலில் அழுத்தம் திருத்தமாக சொல்வது பலன் தரும். குழந்தைகளுடன் போதிய நேரம் செலவழிக்க மாட்டார்கள். குழந்தைகள் ஏதாவது கடினமான வீட்டுப்பாடங்கள், இல்லை பயிற்சிகள் செய்ய வேண்டும் என்றால் நீயே செய்… Continue reading குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட பெற்றோர் தேவை?

குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

நீங்கள் எப்படிப்பட்ட பெற்றோர்?

செல்வ களஞ்சியமே - 70 ரஞ்சனி நாராயணன் சென்ற இரண்டு வாரங்களாக குழந்தை வளர்ப்பில் கதை சொல்லுவது எவ்வளவு சுவாரஸ்யமான விஷயம் என்று சில கதைகள் மூலம் பார்த்தோம். ஒவ்வொரு குழந்தையும் ஒரு விதம் என்பது போலவே ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு விதமே. பெற்றோராய் இருப்பது சுலபமான காரியம் அல்ல. ஆனால் குழந்தை வளர்ப்பு புத்தகங்களும், வாய்மொழியிலும் பலவற்றை தெரிந்து கொள்ளும்போது எது சரி, எது தப்பு என்று சிலசமயம் குழப்பம் ஏற்படும்.  அதுவும் இந்த அவசர… Continue reading நீங்கள் எப்படிப்பட்ட பெற்றோர்?

குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

உறவுகள் தெரியாத குழந்தைகள்: எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் நாம்?

செல்வ களஞ்சியமே - 67 ரஞ்சனி நாராயணன் சென்ற வாரம் ‘சம்மர் கேம்ப்’ பற்றி எழுதியதற்கு ஒரு சகோதரி எனது வலைப்பதிவில் ஒரு கருத்துரை போட்டிருந்தார். ‘தேவையில்லைன்னு சொல்றீங்க….பாட்டி வீடு, உறவினர் வீடு என்று செல்ல முடியாமல் அம்மா, அப்பா இருவரும் வேலைக்குச் செல்லும் இடத்துப் பிள்ளைகளை என்ன செய்வது?’ ரொம்பவும் வருந்த வேண்டிய நிலை இல்லையா இது? உறவுகளே இல்லாமல் ஒரு குழந்தை வளர முடியுமா? அந்தக் காலத்தைப் போல நாலு அத்தை, இரண்டு சித்தப்பா,… Continue reading உறவுகள் தெரியாத குழந்தைகள்: எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் நாம்?

குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, கோடை விடுமுறை

தேவையா இந்த சம்மர் கேம்ப்?

செல்வ களஞ்சியமே - 66 ரஞ்சனி நாராயணன் எங்கள் யோகா வகுப்பில் ஒரு சிறுவன் இப்போது சிறிது நாட்களாக வருகிறான். இரண்டாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு செல்லும் சிறுவன். வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பான். எங்களுக்கு அவனது பேச்சு பிடித்திருந்தாலும், எங்கள் கவனம் கலைந்துகொண்டே இருக்கும். அதுமட்டுமல்ல; ஓரிடத்தில் உட்காருவது என்பது அந்தச் சிறுவனால் முடியாத காரியம். நான் முதலில் நினைத்தது அந்தச் சிறுவன் இங்கு பயிற்சி பெறும் பெண்மணி ஒருவருடைய பிள்ளை என்று. பிறகுதான் தெரிந்தது… Continue reading தேவையா இந்த சம்மர் கேம்ப்?