இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செய்து பாருங்கள், விடியோ பதிவுகள்

கோடையில் குழந்தைகளின் திறனைத் தூண்ட 4 கைவேலைகள்!

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று நேரம் குழந்தைகளை தப்ப வைக்க ஏதேனும் கைவினை வேலைகளை வீட்டில் உள்ள பெரியவர்கள் கற்றுக் கொடுக்கலாம். முன்பெல்லாம் தையல், எம்பிராய்டரி, குரோஷா போன்ற வகுப்புகளுக்கு கோடை விடுமுறையில் குழந்தைகள் செல்வார்கள்... இப்போது கோடை விடுமுறையிலும் படிப்பு தொடர்பான வகுப்புகளுக்கே செல்கிறார்கள். குழந்தைகளின் தனிப்பட்ட ஆர்வங்களை வளர்த்தெடுப்பதற்கான சூழலே மறைந்து விட்டது. மேற்கத்திய பாணியில் குழந்தைகள் சேனல்கள் மூலமாக கைவினை கலைகள் மீதான ஆர்வம் மீண்டும் திரும்பியிருக்கிறது. எப்படியாயினும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மனநிலையை தூண்டும் எதுவும் வரவேற்கத்தக்கதே! உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு சில கைவேலைகள்… Continue reading கோடையில் குழந்தைகளின் திறனைத் தூண்ட 4 கைவேலைகள்!

இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

மூட நம்பிக்கையை பரப்பும் சீரியல்கள்: சன் டிவிக்கு அறிவுறுத்தல்

பெண்களை சூனியம் செய்பவர்களாகவும் பில்லி-சூனியத்தை வலியுறுத்துவதையும் தொலைக்காட்சிகளில் காட்டுவதை நிறுத்த வேண்டும் என்று ஒளிபரப்பு கண்காணிப்பு முனையம் (பிசிசிசி) அறிவுறுத்தியுள்ளது. பிரைம் டைமில் இத்தகைய காட்சிகளை ஒளிபரப்பக் கூடாது என தடைவிதித்துள்ளது. வியாழக்கிழமை முதல் இந்த உத்தரவை அமல்படுத்தியிருக்கிறது. பார்வையாளர்கள் இதுபோன்ற மூடநம்பிக்கையை வலியுறுத்தும் காட்சிகள் குறித்து பிசிசிசியிடன் புகார் தெரிவித்திருந்தனர். குறிப்பாக ஜீ டிவி, கலர்ஸ், சன் டிவி, மா டிவி போன்ற தொலைக்காட்சி சானல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் குறித்து அதிக புகார் வந்ததாகவும் இனி… Continue reading மூட நம்பிக்கையை பரப்பும் சீரியல்கள்: சன் டிவிக்கு அறிவுறுத்தல்

இன்றைய முதன்மை செய்திகள், பெண், பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு

ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி பணிக்கூடம்: நோபல் பரிசு பெற்ற அறிஞரின் பரிந்துரை!

'பெண்களுடன் பணிபுரிவதில் மூன்று சிக்கல் இருப்பதாக தெரிவித்தார். ஒன்று அவர்களுடன் நீங்கள் காதல் வயப்படுவீர்கள், இரண்டு அவர்கள் உங்களுடன் காதல் வயப்படுவார்கள். மூன்று நீங்கள் அவர்களுடைய பணித் திறமை மீது விமர்சனம் செய்தால் அவர்கள் அழுவார்கள். அதனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பணிக்கூடத்தை அமைக்க பரிந்துரைக்கிறேன்' அறிவியல் படித்தவர்கள் ஆண்-பெண் சமத்துவத்தை உணர்ந்தவர்கள் என்கிற நம்பிக்கை இருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள். மடாதிபதிகளைப் போலவும் காலம்காலமாக ஆணாதிக்கத்தில் ஊறிய ஆணைப் போலவும் சிந்தனை கொண்டவர்கள் அறிவியலாளர்களாகவும் நோபல்… Continue reading ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி பணிக்கூடம்: நோபல் பரிசு பெற்ற அறிஞரின் பரிந்துரை!

இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

குழந்தைகளை உணர்வு உள்ளவர்களாக உருவாக்குங்கள்!

செல்வ களஞ்சியமே - 95 ரஞ்சனி நாராயணன் நாம் எல்லோருமே நம் குழந்தைகள் வெற்றியாளராக வரவேண்டும், செல்வந்தராக ஆக வேண்டும், பிரபலமானவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் எங்கு பார்த்தாலும், வன்முறை, கொடூரங்கள் என்று நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் குழந்தைகளை இரக்கம் உள்ளவர்களாக, மெல்லிய உணர்வுகள் கொண்டவர்களாக வளர்ப்பது வெற்றி, செல்வம், பிரபலம் இவற்றை விட மிகவும் முக்கியம் என்று தோன்றுகிறது. மற்றவர்களைப் பற்றிய அக்கறை, மற்றவர்களிடம் மரியாதை, இரக்க குணம் இவைகளை எப்படிக்… Continue reading குழந்தைகளை உணர்வு உள்ளவர்களாக உருவாக்குங்கள்!

இன்றைய முதன்மை செய்திகள், சுற்றுச்சூழல்

‘’பொன்னென மலர்ந்த கொன்றை”

ஞா.கலையரசி ஏப்ரல், மே மாதங்களில் இலைகளை முழுவதுமாக உதிர்த்து விட்டு மரமுழுக்க பொன்மஞ்சள் மலர்களால் நிறைந்து, சரம் சரமாகத் தொங்கிக் கண்ணுக்கும் மனதுக்கும் விருந்து படைக்கும் கொன்றை, நம் மண்ணின் மரங்களுள் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. இதன் தாவரப்பெயர் Cassia fistula Fabaceae குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் வேறு பெயர்கள்:- ஆக்கொத்து, ஆர்கோதம், இதகுழி, கடுக்கை, கவுசி, கொண்டை, கொன்னை, சமிப்பாகம், சரக்கொன்றை, தாமம், நீள்சடையோன். தெற்காசியாவைத் தாயகமாகக் கொண்ட மரம் என்பதால், வெப்பத்தையும், வறட்சியையும்… Continue reading ‘’பொன்னென மலர்ந்த கொன்றை”